நாளை கடைசி நாள்..! கோவையில் கைவினை நகைக் கண்காட்சி!
கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் சார்பில் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 18 வரை அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.
கண்காட்சியை கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் நகை ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சி.என்.வி.டெக்ஸ்டைல்ஸ், வெள்ளியங்கிரி ஆண்டவர் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்ரீ விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பத்மினி ராமமூர்த்தி, கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், ஆஷா ராஜ்குமார், பிரிட்ஜ்வுட் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வித்யாபிரபா, பிராட்வே மெகாப்ளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சங்கீதா சதீஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சியில் தங்கம், வைரம், போல்கி, ஜடாவ், கோயில் நகைகள் மற்றும் பழமையான வடிவமைப்பிலான ஆன்டிக் நகைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை நகைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரிய நகைக் கலை நுட்பத்தையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒவ்வொரு நகையும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ள கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், இந்தியாவின் பாரம்பரிய நகைத் தயாரிப்பு கலையைப் பாதுகாத்து, அதனை நவீன அழகியலுடன் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மணமகள்களுக்கான பிரத்யேக நகைத் தொகுப்புகள், சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆடம்பர நகைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கக்கூடிய பாரம்பரிய வடிவமைப்புகள் இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.