நாளை திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!
Mar 8, 2025, 11:27 IST
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அனைவரும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.