×

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: தங்கம் உயர்வு; வெள்ளி சரிவு!

 

ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் விலை 99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2-ந் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும், ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் சென்னையில் நேற்று. தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800-க்கும், சவரன் ரூ.1,02,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.2,68,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.