×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு- கிராம் ரூ.5,048 க்கு விற்பனை

ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,384க்கு விற்கப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,048க்கு விற்பனை ஆகிறது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபரண தங்கம் விலை சுமார் ரூ.30 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார தேக்கம் காரணமாக, உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ததால், ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சவரனுக்கு 41,500 ரூபாய்
 

ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,384க்கு விற்கப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,048க்கு விற்பனை ஆகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபரண தங்கம் விலை சுமார் ரூ.30 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார தேக்கம் காரணமாக, உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ததால், ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கடந்த வாரத்தில் சவரனுக்கு 41,500 ரூபாய் வரை, விலை உயர்ந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.1,300 வரை விலை குறைந்தது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் ஏற்றமான வர்த்தகம் இருந்தது.
வெள்ளி விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், இன்று கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் விலை சரிந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,048க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,384க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.