×

மீண்டும் திமுக ஆட்சியா? தவெக ஆட்சியா?- Today's Chanakya-வின் கருத்துக்கணிப்பு

 

Today's Chanakya-வின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.


(ஏப்ரல் 29) மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.அந்தத் தடை கடந்த புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ், சாணக்கியா, என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் டிவி-பி மார்க், மேட்ரிஸ், டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அவை கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

இந்நிலையில் Today's Chanakya-வின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திமுக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணி 45, தவெக 63 இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.மற்றவை 2 இடங்களில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.