×

ரிலையன்ஸ் இன்ஸ்டரியஸ் நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பின் அளவின் தான் இன்றைக்கு பாகிஸ்தானின் மொத்த பொருளாதாரம் - அண்ணாமலை..!

 

கோவையில் ஆப்ரேஷன் சிந்தூர் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ராணுவ வீரர்களின் கடின உழைப்பை இது வெளிப்படுத்தும். நாம் பாராட்டவில்லை என்றாலும் அவர்களது வேலை நடந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இந்த புத்தகம் நமக்கு கூறும். 

இந்நூல் இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய ராணுவத்தில் இணைந்து பாரத தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன்.

யுத்தமாக இருந்தாலும் …ஆப்ரேஷன் சிந்தூருக்கு நாம் செய்த மொத்த செலவு 408 மில்லியன் டாலர் (3 ஆயிரத்து 887 கோடி ரூபாய்) என ஆய்வறிக்கை சொல்கிறது. இன்றைக்கு இந்தியா 4.1 டிரில்லியன் டாலர் (3 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்), அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பெரிய நாடு. நமது பாதுகாப்பு துறை பட்ஜெட்டில் .47 சதவீதம் ஆப்ரேஷன் சிந்தூருக்கு செலவு செய்து இருக்கிறோம். 

ஒரு நாடு பொருளாதாரத்தில் மேலே சென்றால் மட்டும் தான், பாதுகாப்பு படையினருக்கு என்ன தேவையோ அதனை கொடுக்க முடியும். தேவைக்கு அதிகமாகவும் கொடுக்க முடியும். எதை பற்றியும் யோசிக்காமல் எவ்வளவு பெரிய யுத்தமாக இருந்தாலும் கூட அதனை செய்ய முடியும், அந்தளவுக்கு பொருளாதார வளர்ச்சியை இன்றைக்கு நம் நாடு பார்த்து இருக்கிறது. நமது பொருளாதார வளர்ச்சி 4.1 டிரில்லியன் டாலர் (3 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்). இதே பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 375 பில்லியன் டாலர் ( 35 லட்சத்து 72 ஆயிரத்து 904 கோடி ரூபாய்). அது ரிலையன்ஸ் இன்ஸ்டரியஸ் நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பின் அளவின் தான் இன்றைக்கு பாகிஸ்தானின் மொத்த பொருளாதாரம். 

நமக்கும் பாகிஸ்தானுக்கு எந்தவொரு காரணத்திற்கும், 25 பைசா நாணய காசும், 500 ரூபாய் நோட்டும் பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமம் தான். பாகிஸ்தான் இன்றைக்கு தனி நாடு கிடையாது. ஆப்ரேஷன் சிந்தூரை பொறுத்தவரை பயன்படுத்திய விமானங்கள் சீனாவில் இருந்து வாங்குகிறார்கள். பயன்படுத்த கூடிய ட்ரோன்கள் டர்க்கியில் இருந்து வாங்குகிறார்கள். மேஜர் மதன் புத்தகத்தில், டர்க்கி, சீனா அவர்கள் தயாரித்த பொருட்கள் வெடிக்கிறதா என்பதை சோதிக்க வழங்குவதாக கூறியுள்ளார். ரூ.14 ஆயிரத்து 500 கோடிசோதனை ஓட்டம் போடுவதற்கு தான் பாகிஸ்தானை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 25 பைசா நாணயமும் ஒரு பக்கமும், 500 ரூபாய் நோட்டு ஒரு பக்கமும், அப்படி தான் அந்த சண்டை. பாகிஸ்தானுக்கு நாம் ஏற்படுத்தி இருக்க கூடிய சேதம் 1.5 பில்லியன் டாலர். இன்றைய மதிப்பின் படி 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய். பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு சேதமாக இருக்கலாம், சேதம் அடைந்த தளவாடங்களுக்கு பதிலாக புதிதாக வாங்கியதாக இருக்கலாம். 

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர் மூலமாக ஒரு அடிக்கு 4 அடிகள் பதிலடி கொடுத்த இந்தியா. Reliance நிறுவனத்தின் Market Capitalization தான் மொத்த பாகிஸ்தான் பொருளாதாரம். 14,500 கோடிகள் பாகிஸ்தானுக்கு சேதாரம் ஏற்படுத்திய இந்தியா. @annamalai_k pic.twitter.com/ouJbXfFkhR

— SivaSenthilkumaran🇮🇳 (@senthil588) August 10, 2026