இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு
Feb 10, 2025, 09:13 IST
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்ட நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விரைவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாகவும் கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது
.