☰
×

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,574 பணியிங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர் உள்ளிட்ட 46 பதவிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுகள் ஜன., 10 ம் தேதி நடக்கிறது. இதற்கு 10 ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. கடந்த மாதம் ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு துவங்கிய நிலையில், இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் இன்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு அனைத்து பிரிவினருக்கும் உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.