×

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இருப்பினும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவிட்-19 பரவுதலால் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த
 

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இருப்பினும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவிட்‌-19 பரவுதலால்‌ ஊரடங்கு அமல்படுத்தியதன்‌ காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் வழங்கபட்டிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அந்த 4 மாவட்டங்கள் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசம் ஜூலை 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.