×

இன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; என்ன செய்யலாம்..? என்ன செய்ய கூடாது..!

 

சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம். இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. 

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்

முழு கிரகணத்தின் போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் அடர் ஆரஞ்ச் நிறத்தில் தோன்றும். இது 'பிளட் மூன்' எனப்படுகிறது. சந்திரன், பூமி நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும். இம்முறை, அது 'அம்பிரா' நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெதுவாக உரசிச் செல்லும். இதனால், சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும்.அப்போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படும். அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம்.

அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும். டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும். இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் இருக்கும். 

சூரிய கிரகணத்தைப் காட்டிலும் , சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. கிரகணத்தை தெளிவாக பார்க்க வேண்டு மென்றால், தொலைநோக்கி அல்லது ஒரு சிறிய தொலைநோக்கி பார்வையை கொண்டு பார்க்கலாம். சந்திர கிரகணத்தையொட்டி, தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவில்கள் நடை சாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? 

• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக்கூடாது. 
• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
• கோயில்கள் அனைத்தும் நடை சார்த்தப்பட்டிருக்க வேண்டும். 
• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும். 
• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
• கிரகணம் முழுதும் முடிந்ததும் குளித்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். 
• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். 
• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.