இன்று மறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாள்.. மனைவி உருக்கமாக பதிவு..!
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.
பலரையும் சிரிக்க வைத்த நடிகர் சேதுராமன் கடந்த 2020ல் மார்ச் மாதத்தில் தான் திடீரென காலமானார். நடிகர் சேதுராமன் மரணம் அடையும்போது அவருடைய மனைவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தார்.சேதுராமன் மரணமடைந்த பிறகு அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தன்னுடைய கணவரே தனக்கு மகனாக பிறந்து விட்டார் என்று சேதுராமனின் மனைவி உமா சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய கணவர் குறித்து அவர் பேசி இருக்கிறார். அதில் என்னுடைய கணவர் சேதுராமனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய செயல்கள் ஒவ்வொரு இடத்திலும் அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு முறை எங்கள் ஹாஸ்பிட்டலில் ஒருவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது.அப்போது அவருடைய மனைவி அவர் போட்டிருந்த தாலி செயினை அடகு வைத்து மருத்துவமனை பீஸ் கட்டி இருக்கிறார். இது சேதுராமனுக்கு பிறகு தான் தெரிய வந்தது. அப்போது அந்த பணத்தை வேண்டாம் என்று சொல்லி அந்த பெண்ணின் கையில் கொடுத்து நீங்கள் தாலி செயினை திருப்பி கழுத்தில் போடுங்கள் மருத்துவமனைக்கு பீஸ் கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.சேதுராமன் பலருக்கு உதவிகள் செய்து இருக்கிறார் அவரை போல ஒருவரை பார்க்கவே முடியாது. அவர் கிளினிக் போகும்போதெல்லாம் என்னையும் கூடவே கூட்டிட்டு போவார். மருத்துவராக மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மையோடு அவர் இருப்பது எனக்கு வியக்க வைத்தது என்று எமோஷனலாக தெரிவித்து இருந்தார்.
இன்று அவருக்கு 41வது பிறந்தநாள். இன்று அவரது மனைவி உமா சேதுபதி, மறைந்த கணவரை நினைத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் இவ்வுலகை விட்டு வெளியேறிய நாளில் மட்டும் வருத்தப்படுகிறேன். கடவுள் உங்களை தனது உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது நான் உங்கள் அருகில் இல்லாததற்கு வருத்தப்படுகிறேன்' என கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.