இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு நினைவு நாள்.. தவெக நிர்வாகி செங்கோட்டையன் பதிவு..!
Dec 5, 2025, 09:49 IST
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் களத்தில், பெண்களாலும் சாதிக்க முடியும் என்று காலூன்றி ஜெயித்துக் காட்டியவர் ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில், அரசியலில் அவர் வெறும் 9 ஆண்டுகளுக்குள்ளேயே பிரமிக்கத்தக்க எழுச்சியைப் பெற்று அசைக்க முடியாத தலைவராக உருவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எக்ஸ் பதிவில், "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்" என கூறியுள்ளார்.