×

இன்று சண்டே... மட்டன் வாங்க போறீங்களா..? இதை படிச்சிட்டு போங்க..!  

 

மட்டன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஆட்டிறைச்சி குறித்து ஆய்வுகள் சொல்வது என்ன? வேகவைத்தோ அல்லது கிரில் செய்தோ மட்டனை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலுக்கு வலு கிடைக்கிறதாம்..

உடல் சூட்டினை தணிக்கும் தன்மை ஆட்டுக்கறிக்கு உள்ளதாம்.. தொடர்ந்து மட்டன் சாப்பிட்டு வருபவர்களுக்கு சரும பிரச்சனைகள் அவ்வளவாக வருவதில்லை.. சருமத்துக்கான பளபளப்பு கூடுவதுடன், பார்வை கோளாறுகளும் நீங்குவதாக சொல்கிறார்கள்.ஆட்டிறைச்சியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின் B12 நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.

மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, ஆட்டிறைச்சியில் அதிக இரும்புச்சத்து உள்ளது... அதாவது, 100 கிராம் சிக்கனில் வெறும் 1.7 மி.கி மட்டுமே இரும்புச்சத்து உள்ளநிலையில், 100 கிராம் இளம் ஆட்டிறைச்சியில் சுமார் 3.8 மி.கி.இரும்புச்சத்து காணப்படுகிறதாம்.. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மட்டன் மிகவும் நன்மை அளிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் ரத்த சோகையை வராமலும் தடுத்து நிறுத்துகிறது..

இப்படிப்பட்ட சூழலில்தான், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறைவுற்ற கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறதாம்.. ஆனால், நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் நம்முடைய உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறதாம்.. இந்த நிறைவுறா கொழுப்புகள் மட்டனில் அபரிமிதமாகவே நிறைந்துள்ளது.. எனவே, இதனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அந்த ஆய்வு சொல்கிறது.
 

அதுமட்டுமல்ல, நம்முடைய உடலுக்கு தேவைப்படும் B12-ல் கிட்டத்தட்ட 32 சதவீதம் இந்த மட்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.. ரத்த சிவப்பணுக்களை நம்முடைய உடடிலில் உற்பத்தி செய்வதற்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் தேவையானதாகவும இருக்கிறது.