இன்று தேர்தல் நாள் : இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
போர் பதற்றம் தணித்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்தைக் கடந்தது. இதனிடையே தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படும் அக்ஷய திருதியை நாளை முன்னிட்டு கடந்த வாரம் விலை ஏற்றம் கண்டது. பின்னர் இந்த வார தொடக்கம் முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தங்கம் விலை கிராமுக்கு ரூ.14,300-க்கும் சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. (ஏப்.21) தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், நேற்று (ஏப்.22) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.23) சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. நேற்று (ஏப்.,22) ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,280க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,250க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை கிராமுக்கு 5 குறைந்து 270-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு 5,000 குறைந்து 2,70,000-க்கும் விற்பனையாகிறது. தேர்தலையொட்டி இன்று நகைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.