×

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று - அண்ணாமலை ட்வீட்

 

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் , கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தனது எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று. 

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. திருக்குறள் முதலான தமிழின் பெருமை மிகுந்த நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உலகிற்கே பாரதம் குருவாக விளங்கும் என்ற அவரது கனவும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.