×

இன்று அனிதா நினைவு தினம்: 'Ban Neet' வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த தமிமுன் அன்சாரி..!

 

மாணவி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி ‘Ban Neet’ வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி ‘BAN NEET’ என்று வாசகம் பொறித்த கறுப்பு நிற டி-ஷர்ட் அணிந்து பேரவைக்கு வருகை வந்தார். மேலும் மறைந்த அனிதாவின் புகைபடம் அந்த டி-ஷர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. பேரவைக்கு செல்லு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “இன்று அன்பு தங்கை அனிதா மறைந்த நாள். இன்றுடன் அவர் மறைந்து 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது இறப்புக்கு பிறகு, நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரப்பூர்வமாக 31 மாணவ மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். இது மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் ஒன்றிய அரசு அதை ஏற்க மறுக்கிறது. நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை மையப்படுத்தி தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் பெரியார் திடலில் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அனிதாவின் தியாகம் வீணாகக்கூடாது என்பதுதான் என் நோக்கம். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் பெசன்ட் நகரில் ஒன்றுகூட பொதுப்பணித்துறை அமைச்சரிடம் அனுமதி கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அனிதா நினைவு நாள்
‘BAN NEET’ - கறுப்பு சட்டை !
பேரவையில் தமிமுன் அன்சாரி

மருத்துவம் படிக்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு ‘BAN NEET’ வாசகம் கொண்ட கறுப்பு T-shirt அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி.#banneetpic.twitter.com/2pf4fgdFIq

— TheHardline.in (@Thehardlinenews) September 1, 2026