இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு..!
Nov 17, 2025, 05:45 IST
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இன்று (17-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கனமழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அமைச்சர் நமச்சிவாயம். இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .