×

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகம் முழுவதும் இன்று நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு கிடந்த நிலையில் நியாயவிலை கடைகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வந்தது. நியாயவிலைக் கடைகளின் மூலம் அரசு வழங்கிய 1000 ரூபாய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து
 

தமிழகம் முழுவதும் இன்று நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு கிடந்த நிலையில் நியாயவிலை கடைகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வந்தது. நியாயவிலைக் கடைகளின் மூலம் அரசு வழங்கிய 1000 ரூபாய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணிசெய்து வந்தனர்.

இந்நிலையில் உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இந்த பணிகளை நியாய விலை கடை ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10 ,ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் செய்தனர். எனவே அந்த மூன்று நாட்களுக்கு மாற்றாக அக்டோபர் 17, செப்டம்பர் 19 மற்றும் நவம்பர் 21 ஆகிய தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.