×

ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய லீக் போட்டியில் மும்பை-ஐதராபாத் மோதல்!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் க்‌ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 188 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணியும் 188 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 11 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.