×

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! 

 

சென்னையில் ஆபரண  தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே உச்சத்தை தொட்டது. இதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது.  மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கியுள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.

நேற்று சென்னையில்   தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 ஆகவும், ஒரு சவரன்  ரூ.44,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.  இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.  இதன் மூலம் ஒருகிராம் தங்கம் ரூ.5580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640 -க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,392க்கு விற்பனையாகிறது.  அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.30-க்கும் , ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.79,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.