×

குறைந்தது தங்கம் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனையானது. வெள்ளி விலை முதல்முறையாக கிலோ ரூ.1 லட்சத்தைக் கடந்தது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1.01 லட்சத்திற்கும் விற்பனை  செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 6,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ரூ. 55,200க்கு விற்பனையானது.