×

மீண்டும் குறைந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை 46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு தொடர்ந்து தங்கத்தின் விலையில் உயர்வும் , விலை குறைவும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 840 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605 ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,600 க்கு விற்கப்படுகிறது.  இதன் மூலம் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது.