×

நேற்று மாணவி, இன்று மாணவன் அடுத்தடுத்து தற்கொலை- கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

 

தண்டலம் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்றும் கல்லூரியின் மாடியில் இருந்து மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாடியில் இருந்து குதித்த மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இன்று தற்கொலைக்கு முயன்ற மாணவன் 2 ஆம் ஆண்டு படித்துவருகிறார்.நேற்று கல்லூரியின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். அடுத்தடுத்த சம்பவங்களால் கல்லூரிக்கு காலவரையறையற்ற விடுமுறை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.