திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!
Feb 14, 2026, 17:41 IST
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடைகால சிறப்புத் தொகுப்பு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என தெரிவித்தார்.
இபிஎஸ் தேர்தல் வாக்குறுதியாக ரூ.2,000 அறிவித்ததால், முதல்வர் ரூ.5,000 வழங்கியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.வங்கிக் கணக்கில் ரூ.5,000 செலுத்தப்பட்டது தேர்தலுக்கான அச்சாரம் என்றும், தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை மறைப்பதற்காகவே ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் விடுமுறை அளிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.