×

TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..! டவுன்லோடு செய்வது எபப்டி?

 

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். வரும் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு எண்.11/2025 நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலை தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், தொகுதி-II பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-2 பொது அறிவு (விரிந்துரைக்கும் வகை) தேர்வானது பிப்ரவரி 22-ந்தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


அதேபோல், தேர்வுக்கான நாளில், பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் தேவையான அடையாள ஆவணத்தையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இணையதளத்தின் மூலம் மட்டுமே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.