☰
×

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு- ஹால் டிக்கெட் வெளியீடு

 

TNPSC சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒருமுறைப் பதிவு முகப்பில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.