×

தமிழக ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழக ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்தறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர் என்பது குறிப்பிடதக்கது. ஆர்.என். ரவி 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ்
 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தமிழக ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய‌ உளவுத்தறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர் என்பது குறிப்பிடதக்கது. ஆர்.என். ரவி 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இவர் பதவி வகித்துள்ளார். உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் ஆர்.என். ரவிக்கு உண்டு