×

இன்று முழு ஊரடங்கை மீறியதாக 2,308 வழக்குகள் பதிவு; 1,453 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் இன்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் இன்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் 319, ஆட்டோக்கள் 24, இலகுரக வாகனங்கள் 14, இதர வாகனங்கள் 2 என மொத்தம் 359 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முகக்கவசம் அணியாத 1,288 நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 147 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

uur