×

தமிழ்நாட்டில் 241 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

 

உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் பாதிப்புகள்  தமிழகத்தில் இதுவரை 241 பேருக்கு  கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 231 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

உருமாறிய கொரனோ பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. இதனால் மருத்துவ மற்றும் வீட்டு  சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சத்துக்கும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் செங்கல்பட்டில் 144 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், மதுரை 11 பேருக்கும், திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 6 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியபட்டுள்ளது. திருச்சி- 5, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டையில் தலா 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் தலா 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி- 3, ஆந்திர பிரதேசம், மேற்குவங்கம் தலா 2, கேரளா, டெல்லி, ஜார்க்கண்டில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.