×

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காத்தது திமுக அரசு - ஆதவ் அர்ஜூனா

 

நீட்டுக்கு எதிராகப் போராடணும்னா அறிவாலயத்துல போய் போராடலாம். ஏன் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்ல போய் போராட்டம் நடத்தணும் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “எங்களுடைய முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டியதில்லை. முதலமைச்சர் தயார்படுத்திட்டு வந்ததால தான் எதிர்க்கட்சி தலைவரா உட்கார்ந்திருக்கீங்க. எங்களைப் பற்றி நீங்க பேசாததால தான் இன்னிக்கு இந்த இடத்துல இருக்கீங்க. பேசிருந்தீங்கன்னா வீட்ல உக்காந்துட்டு இருந்திருப்பீங்க.

கொலையாளிகள் கொலையை மறைக்க பார்ப்பார்கள், கடந்த திமுக ஆட்சியில் ஒரு அரசே கொலையை மறைக்கப் பார்த்தது. கடந்த ஆட்சியில் வெளியான கொள்கை விளக்க குறிப்பில் இருந்து படிக்கிறேன்... தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அருணா ஜெகதீசன் அறிக்கை அளித்தார். அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காத்தது திமுக அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. நீட்டுக்கு எதிராகப் போராடணும்னா அறிவாலயத்துல போய் போராடலாம். ஏன் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்ல போய் போராட்டம் நடத்தணும், எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் போதைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம்”என்றார்.