×

4 நாட்கள் மிரட்டவிருக்கும் கனமழை... நீலகிரிக்கு செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை!

 

நேற்று சென்னையில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவி வருகிறது. ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நீலகிரியில் இன்று ஆரம்பிக்கும் கனமழை நவம்பர் 16ஆம் தேதி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நீலகிரியில் சுற்றுலா தலங்கள் அதிகளவில் இருக்கின்றன. நீலகிரி முழுவதும் மலை சார்ந்த பகுதிகள். இப்படியிருக்கையில் அங்கு கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த நான்கு நாட்களும் நீலகிரிக்குச் செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. வேறு எதாவது பயண திட்டமிடல் இருந்தால் அதை ரத்து செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.