சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், பொங்கல் பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Jan 6, 2024, 16:00 IST
'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.