×

‘அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும்’ – திமுக பரப்புரை, பாஜக யாத்திரைக்கு அரசு முட்டுக்கட்டை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு அரசியல், மதக்கூட்டங்களுக்கு தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் திமுக பரப்புரையை தொடங்கியிருக்கும் சூழலில், பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. ஆனால் அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் திமுகவினரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கூட்டங்களுக்கான தடையை தகர்க்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு அரசியல், மதக்கூட்டங்களுக்கு தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் திமுக பரப்புரையை தொடங்கியிருக்கும் சூழலில், பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. ஆனால் அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் திமுகவினரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கூட்டங்களுக்கான தடையை தகர்க்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரங்கங்களில் 50% நபர்களுடன் அதிகபட்சம் 500 பேருடன் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து அரசியல், மதக் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்றும் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, திமுகவின் பரப்புரைக்கு பாஜக யாத்திரைக்கு அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.