×

#BREAKING விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் ஒப்புதல்

 

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கும்படி பொறுப்பு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரசமைப்பு பிரிவு 164ன் கீழ் விஜய்க்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர்

சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது. இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்ந்தது. இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை வழங்கினார். இதனையடுத்து ஆளுநர் விஜய்க்கு ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.