×

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தேசமும் உலகமும் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது - ஆளுநர்

 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தேசமும் உலகமும் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தெய்வீகப் பரிசான உலகளாவிய அன்புக்காக, தேசமும் உலகமும் அவரை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தலைசிறந்த சீடரான சுவாமி விவேகானந்தர் சுயமரியாதை மற்றும் பெருமிதம் கொள்வதற்கான அழைப்பை நமக்கு விடுத்து, பாரதத்தின் புகழ்பெற்ற எதிர்காலத்துக்கான வழியைக் காட்டினார்.