×

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு!

 

அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். 

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,  "ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில், தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பிரபு ஸ்ரீராமரின் தீவிர பக்தரான ஸ்ரீ ஆஞ்சநேயர், வலிமை, ஞானம், சேவை மற்றும் பக்தி ஆகியவற்றின் உருவகம். 2047ஆம் ஆண்டுக்குள் நமது பாரதத்தை முழுமையாக வளர்ச்சியடையச் செய்து, ஒரே குடும்பம் போல் மகிழ்ச்சியுடன் வாழ நமக்கு ஞானம், வலிமை மற்றும் உறுதியை அவர் நமக்கு அருளட்டும்.