திரையில் "ஹீரோவாகவும்" ஆட்சியில் "ஜீரோவாகவும்" இருப்பது வெட்கமாக இல்லையா CM sir?”- அப்பாவு
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100-நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், வழிப்பறி போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் #தவெகநிர்வாகிகள் மற்றும் விஜய்ரசிகர்களால் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா CM sir ? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு தவெக நிர்வாகிகள்,இதேபோன்று பாலியல் குற்றங்களில் சென்னை காசிமேடு தவெக நிர்வாகி பாம்பு தினேஷ்,பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி என்ற பிரகாசம்,சேலம் தவெக பிரமுகர் மணிகண்டன்,சென்னை ஆலந்தூர் தவெக நிர்வாகி வேம்புலி,மதுரை கீழமாத்தூர் தவெக நிர்வாகி கண்ணன், சேத்துப்பட்டு தவெக நிர்வாகி யோகேஷ்வரன், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் தவெக நிர்வாகி தியாகு உட்பட நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தான் தமிழக பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் #சிங்கப்பெண் பாதுகாப்பா CM sir ?
இதுபோன்று மோசடி மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்ட திருச்செந்தூர் தவெக நிர்வாகி ராஜா,தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி ராம்குமார்,சேலம் சங்ககிரி அருகே கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி பூபதிராஜா,வேலூரில் 1 இலட்சம் கேட்டு மிரட்டிய தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மூதாட்டியிடம் 3 சவரன் வழிப்பறி செய்த தவெக பிரமுகர் கௌதம்,புதுக்கோட்டையில் 15 கோடிக்கு மேல் மோசடி செய்த தவெக சரவணன் என்று தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களால் #தூயஆட்சி நடத்துகிறீர்களா CM sir ? தவெக ஆட்சி அமைந்தது முதல் நாட்டில் நடைபெற்று வரும் குற்றச் செயல்களில் 50% மேல் ஈடுபட்டு வருபவர்கள் 30 வயதிற்குட்பட்ட தவெக நிர்வாகிகளும் விஜய் ரசிகர்களும் என்றே தெரிகிறது. இவர்கள் திரைப்படங்களில் நீங்கள் விஜய் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பார்த்து இப்படித்தான் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருவதை பார்த்து ரசிக்கிறீர்களா CM sir? மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினரை கண்டித்து திருத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்வருக்கு உண்டு என்பதை மறந்து திரையில் "ஹீரோவாகவும்" ஆட்சியில் "#ஜீரோவாகவும்" இருப்பது வெட்கமாக இல்லையா CM sir?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.