அன்பில் மகேஸ் பொய்யாமொழி தோல்வி- தவெக வெற்றி
May 4, 2026, 18:03 IST
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி 8000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜியிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் நவல்பட்டு விஜி 89,564 வாக்குகளும், அன்பில் மகேஷ் 80,588 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட குமார் 10,355 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.