×

தமிழகத்தில் 10,000ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே 90 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 29 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 9,344 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின்
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே 90 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 29 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 9,344 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 78,706ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2884பேர் சென்னைவாசிகள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 39 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,071ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,263 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,02,022 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.