TN BUDGET 2026-27 : ஒரு ரூபாயில் அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு?
Aug 5, 2026, 13:31 IST
2026-27 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்த குடிமக்களுக்கான கையேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் வரவு-செலவுத் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது, எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
செலவு விபரங்கள்
- உதவித் தொகைகளும் மானியங்களும்: 33.2 பைசா
- ஊழியர்களின் சம்பளங்கள்: 17.3 பைசா
- வட்டி செலுத்துதல்: 15 பைசா
- மூலதனச் செலவு: 10.9 பைசா
- கடன்களை திருப்பிச் செலுத்துதல்: 9.9 பைசா
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள்: 8.0 பைசா
- செயல்பாடுகளும் பராமரிப்புகளும்: 3.8 பைசா
- கடன் வழங்குதல்: 1.9 பைசா
ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது?
- பொதுக்கடன் - 33.1%
- கடன் வசூல் மற்றும் மூலதன வரவு - 0.1%
- ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் -6.3%
- ஒன்றிய வரிகளின் பங்கு - 11.9%
- மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 43.3%
- மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%