“பாத்ரூமில் 3 மணிநேரம் அமர்ந்து இருந்த உதயநிதி”- பேரவையில் அத்துமீறிய நிர்மல்குமார்
பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்னு சொல்ல 5 நிமிஷம் ஆகுமா..? என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் உட்கார்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் 😂😂
— Aheen Maxi (@aheenmaxi) August 21, 2026
Nirmal Kumar Mass 😂😂😂 #TVK pic.twitter.com/kbxrh4KEOT
இன்றைய சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மின்கட்டண உயர்வு குறித்து பேசுகிறார். இடையில் குறுக்கிட்டு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கரூர் கம்பெனி என்று பேச, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சங்கி அமைச்சர் என்று நான் சொல்லட்டுமா? என்று பதிலுரைக்க, மீண்டும் குறுக்கிடுகிறார் நிர்மல்குமார் பாத்ரூமில் உட்கார்ந்திருந்தவர்கள் யார் என்று தெரியும் என்றதும், மீண்டும் உதயநிதி எழுந்து யார் யார் எவ்வளவு நேரம் பாத்ரூமில் உட்கார்ந்து இருக்காங்க என்பதை கணக்கெடுக்க ஒரு அமைச்சரையே போட்டிருக்குதா இந்த அரசு என்றார்.