அதிமுக ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது; திமுக 2.80 லட்சம் கோடி தான் கடன் வாங்கியுள்ளது- அமைச்சர் எ.வ.வேலு
அதிமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி கடன் வாங்கபட்டதாகவும், திமுக ஆட்சியில் 2.80 லட்சம் கோடி தான் கடன் வாங்கப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், இடைக்கால பட்ஜெட் என்பது கானல் நீர். எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. உண்மையிலே நாங்கள் வராமட்டோம் என்று நினைத்து எதிர்கால திட்டங்களை அறிவிக்க வில்லை என்று நினைக்கிறேன் என்று பேசினார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர், இடைக்கால பட்ஜெட் என்பது நாங்கள் நிறைவேற்றி உள்ள திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு தான். 5 ஆண்டு கால ஒட்டு மொத்த வளர்ச்சி திட்டங்கள் ஓட்டு மொத்த தொகுப்பு தான் இந்த பட்ஜெட். அடுத்த ஆண்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மீண்டும் நமது முதல்வர் வந்து அறிவிப்பார். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசி நயினார் நாகேந்திரன், கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி இந்த அரசு கடன் வாங்கியுள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் மீது சுமதப்படும் கடன் 1.32 லட்சம் ரூபாய் என்று பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திராவிட மாடல் ஆட்சி தான் அதிகம் கடன் வாங்குகிறது என்று பரப்புகிnewறார்கள். இந்த ஆட்சி பொறுப்பு ஏற்ற போது 4.7 லட்சம் கோடி கடன் இருந்தது. அவர்கள் வாங்கிய கடனுக்கு 1.88 லட்சம் கோடி வட்டி. அதிமுக மூலம் 6 லட்சம் கோடி கடன் எங்களுக்கு வந்துள்ளது. நாங்க வாங்கிய கடன் 2.89 லட்சம் கோடி தான். அதிமுக ஆட்சியில் அறிவித்து விட்டு சென்ற திட்டத்திற்கு நாங்கள் செலவு செய்துள்ள உள்ளோம். நெடுஞ்சாலைத்துறையில் 13,892 கோடி நாங்கள் செலவு செய்து உள்ளோம்.11 மருத்துவ கல்லூரிகளுக்கு 58 சதவீத நிதியை நாங்கள் செலவு செய்து உள்ளோம். 42 சதவீதம் தான் அதிமுக செலவு செய்தது என்று பதில் அளித்தார்.