×

“விஜய் நன்றி தெரிவிக்க செல்லவில்லை; இடைத்தேர்தல் வருவதால் சென்றுள்ளார்”- டிகேஎஸ் இளங்கோவன்

 

விஜய் அங்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லவில்லை, அங்கு இடைத்தேர்தல் வரவிருப்பதால்தான் சென்றார் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “தவெக ஆட்சியை 6 மாதம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? மக்கள் நலன் கருதித்தான் நாங்கள் கேள்விகளை எழுப்புகிறோம். விஜய்  திருச்சிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லவில்லை, அங்கு இடைத்தேர்தல் வரவிருப்பதால்தான் சென்றார். திருச்சி வாக்காளர்கள் இப்போது விஜய் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்வார்கள். மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென்றால் தொகுதி முழுவதும் வாகனத்தில் பயணித்து ஆங்காங்கே நின்று கூட்டத்தில் பேசி, அவர்க அளித்த வாக்குகளுக்கு தனது நன்றியை தெரிவித்து இருப்பார். ஆனால் விஜயோ தொகுதிக்கு வெளியிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி அவர்களிடம் பேசியுள்ளார்” என்றார்.