×

பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருவண்ணாமலை- மூச்சுத்திணறலால் பக்தர்கள் கடும் அதிருப்தி

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கட்டுக்கடங்காமல் அலைமோதும் பக்தர்களின் கூட்டத்தால் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் அண்ணாமலையார் திருக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்படவுடன் இரவு முழுக்க கோவில் வெளியே காத்திருந்த பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலை முதல் கோவிலுக்குள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் காத்திருப்பு கூடத்தில் தங்க வைத்து கூட்டம் குறைய குறைய பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் காத்திருப்பு கூடம் திறந்தவுடன் பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் சிரமப்பட்டு கூட்ட நெருதில் சிக்கி சாமி தரிசனம் செய்யும் நிலையும் காணப்படுகிறது. அதே வேளையில் திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் பெண் ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட சூழலில் மருத்துவர்கள் எவரும் சம்பவ இடத்திற்கு வராததால் பக்தர் மிகுந்த அவதிக்குள்ளானார். அதே வேளையில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரக்கூடிய கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் திருக்கோவிலை சுற்றி அனைத்து இடங்களிலும் பல்வேறு மாநில பதிவிற்கும் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது குடியிருப்பு வாசிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பதிவின் கொண்ட வாகனங்கள் எவ்வித சோதனையும் செய்யப்படாமல் தங்கு தடையின்றி அனைத்து இடங்களுக்கு செல்லும் அளவிற்கு காவல் துறையினர் செயல்படும் நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தவோ வீட்டிற்குள் எடுத்துச் செல்லவோ அனுமதி மறுத்து வருகின்றனர்.