☰
×

தி.மலை கோயிலுக்கு அசாமில் இருந்து வந்த குட்டி யானை

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதான ஆண் யானை ‘ஹிராலால்’ புதிதாக அழைத்து வரப்பட்டது.


அசாம் மாநிலத்திலிருந்து லாரி மூலமாக நேற்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட `ஹீராலால்’ என்னும் 8 வயது ஆண் யானை குட்டிக்கு ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் எதிரே சிவாச்சாரியார்கள் கஜ பூஜை செய்து வரவேற்பு அளித்தனர். யானைக்குட்டியைப் பார்த்து வியந்த பக்தர்கள் `அழகா க்யூட்டா இருக்கு... கண்ணுப் படப் போகுது’ என்று செல்லமாகக் கொஞ்சியதுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு யானை வந்ததால், பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் யானைக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு 'ருக்கு' என்ற பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில்,  'ஹீராலால்' என்ற 8 வயது ஆண் யானை கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜகோபுரம் முன்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் காண்பித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.