தனியாக ஓட்டு கேட்கும் தவெக வேட்பாளர்! திருத்தணியில் பரிதாபம்
திருத்தணியில் தவெக வேட்பாளர் சத்திய குமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருத்தணியில் தவெக சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார் போட்டியிடுகிறார். சத்தியகுமார் திருத்தணியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா பார்ட்டிகள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதாகவும், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும். தொடர்ந்து இவர் வேட்பாளராக இருந்தால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.