×

திருப்பூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை..!!

 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.