×

திருப்பூர்- முககவசம் அணியாதவரிடம் சாதி பெயர் கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூரில் முககவசம் அணியாமல் வந்த நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பாட்டார். கொரானா பரவலை தடுக்கும் விதமாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் – பெருமாநல்லூர் நான்குரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபரிடம், பெருமாநல்லூர் காவல்நிலைய காவலர் காசிராஜன்
 

திருப்பூரில் முககவசம் அணியாமல் வந்த நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பாட்டார். கொரானா பரவலை தடுக்கும் விதமாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், முகக் கவசம் அணியாமல்

வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் – பெருமாநல்லூர் நான்குரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபரிடம், பெருமாநல்லூர் காவல்நிலைய காவலர் காசிராஜன் அபராதம் விதிக்க, விபரங்களை சேகரித்தார். அப்போது சாதியின் பெயரை கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், காவலர் காசிராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மூக வலைதளங்களில் வைரலாகி

பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது வழக்கமாக சாதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படும் நிலையில், முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதி பெயர் கேட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து பெருமாநல்லூர் காவல்நிலைய பணியில் இருந்த காவலர் காசிராஜனை மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவிட்டார்.