×

திருப்பத்தூரில் தீக்குளித்து இறந்த இளைஞர் குடும்பத்துக்கு உதவிய எஸ்.பி!

திருப்பத்தூரில் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்திருப்பது ஆறுதலை அளிக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது பிற்பகலில் ஊரடங்கை மீறி முகிலன் (27) என்பவர் பைக்கில் வந்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் விரக்தி அடைந்த அவர் போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று
 

திருப்பத்தூரில் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்திருப்பது ஆறுதலை அளிக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது பிற்பகலில் ஊரடங்கை மீறி முகிலன் (27) என்பவர்

பைக்கில் வந்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் விரக்தி அடைந்த அவர் போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறி மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒன்பது நாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை முழுவதும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இது குறித்து மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கூறுகையில், “தீக்குளித்த இளைஞரின் உயிரைக் காப்பாற்ற சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளது. இந்த சூழலில் அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க மதுவும் ஒரு காரணம் என்று தெரிகிறது. இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், கைம்பெண்ணுக்கான மாத உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.