திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து..! – பக்தர்கள் வசதிக்காக அதிரடி அறிவிப்பு!
இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளும், யாகங்களும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதர அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருத்தணியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. சென்னையில் புகழ்பெற்ற வடபழனி கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அறநிலையத்துறை சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி பெருவிழாவின் புகழ்பெற்ற நாளான சூரசம்ஹார நாள் வரும் வியாழக்கிழமை நடக்கிறது.
திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் உலகப்புகழ்பெற்றது என்பதால் அதைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும் இந்த சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முதலே தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 16ஆம் தேதி வரை 100ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு